அண்மையில் பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரமான மரடோனா தென்னிந்தியா
வந்திருந்தார். அவரை காண்பதற்கு கடவுளை பார்க்க வந்ததுபோல் ரசிகர்கள்
கூடியதாக ஊடகங்கள் கூறிக்கொண்டிருந்தன. தலைவன், கடவுள் என்றெல்லாம் கூட சில
ஊடகங்கள் விழித்திருந்தன. தற்போது அரசியலிலும் தடம்பதித்து
சென்றுகொண்டிருக்கும் மரடோனா, கால்பத்தாட்ட உலகை பொறுத்தவரை ஒரு கடவுள்தான்
என்பதில் ஐயமில்லை. அந்தக்கடவுள் வரம் தரவில்லை. ஆனால் தமிழர்களுக்கு
இரண்டு முக்கியமான பாடங்களை தந்து சென்றிருக்கின்றது. ஒன்று, பிரபாகரன்
என்ற பெயர் கொண்ட காவலரை கட்டியணைத்து, தான் பச்சை குத்தியிருந்த சே குவேரா
படத்தை காட்டியது. இரண்டாவது, ஊடகங்களில் பெரிதாக கவனிக்கப்படவில்லை
என்றாலும் தமிழர்களுக்கு அவசியமானது.
ஊடகவியலாளர் ஒருவர் பெரும் கஷ்டப்பட்டு கேட்ட நாலைந்து கேள்விகளுக்கு நச் பதில்களை சொன்ன மரடோனா, ஆங்கிலம் தெரியாததை குறையாக உணர்கிறீர்களா என்று கேட்டதற்கு, " எனது தாய்மொழி தெரிந்திருக்கின்றமைக்கு பெருமைப்படுகிறேன். அந்நியமொழியான ஆங்கிலம் தெரியாததற்கு ஏன் வருத்தப்படவேண்டும்? " என பதிலளிக்கிறார். ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் சாதிக்கமுடியும், ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என நினைக்கும் தமிழர்கள் இதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
தாய்மொழி பேசுவதை பெருமையாக கொண்ட மரடோனாவின் சாதனைகள் அனைவரும் அறிந்தவை. அவை எல்லாம் அவர் தனது திறமைகளால் சாதித்தவை. ஆங்கிலம் என்பது ஒரு மொழியே தவிர திறமை அல்ல என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்வதில்லை. நான் தமிழன் என தெரிந்தும், நான் தமிழில் பேசியும் கூட, உடைந்து நொருங்கிய ஆங்கிலத்திலேயே பேசும் பல தமிழர்களை நான் புலம்பெயர் மண்ணில் கண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் படித்தால்தான் எதிர்காலம் சிறக்கும் என தாங்களாகவே முடிவெடுத்து பிள்ளைகளை பணம் கறக்கும் ஆங்கிலப்பள்ளிகளில் படிக்கைவைக்கும் பலரை நான் என் மண்ணில் கண்டிருக்கிறேன். விடுமுறை காலத்தில் வீட்டிலிருந்த பிள்ளை தமிழ் பேச கற்றுக்கொண்டுவிட்டது என கவலைப்பட்டவர்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியாமல் ஆடிப்போய் நின்றிருக்கிறேன். (கவனிக்கவும், அவர்கள் கவலைப்பட்டது பிள்ளை தமிழ் பேசுகிறது என்று. ஆங்கிலம் மறந்துவிட்டது என்றல்ல.) இதுவும் என் மண்ணில்தான்!
ஆங்கிலத்தை வளர்க்கும் இவர்கள் அதனால் தாங்களும் வளர்வதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்நிய நாட்டை நம்பியிருக்க வேண்டிய அடிமை நிலைக்குத்தான் தங்களையும் தமது நாட்டையும் தயார்படுத்துகிறார்கள். ஆங்கிலம் தெரிந்தால்தான் எதிர்காலம் என்றால், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவை தவிர வேறு அபிவிருத்தியடைந்த நாடுகளே உலகில் இருந்திருக்காது. ஆனால் இதை உணராமல் ஆங்கில மோகம் கொண்ட எம்மவர்கள் சிலர் ஆங்கிலம்தான் எதிர்காலம் என சொல்லிக்கொண்டு அத்தகைய நிலைக்கு தங்களை கொண்டு செல்கிறார்கள். மொழி அழிந்துவிட்டால் ஆங்கிலம்தான் எதிர்காலம் என்ற நிலை வரும்தான். அதனால் நாடோ, இனமோ உயரப்போவதில்லை. மாறாக அடையாளம் தொலைத்த, அந்நிய தேசத்துக்கு அடிமையான ஆண்டாண்டுகால வாழ்வுதான் கிடைக்கும்.
இவர்களுக்கெல்லாம் இந்த மரடோனா விடயம் புரியுமா தெரியவில்லை. ஆனால் அவரை கடவுளாக நினைக்கும் ரசிகர்களுக்கு புரியத்தானே வேண்டும். இன்னமும் தாய்மொழியை ஒதுக்கி அந்நியமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மரடோனாவின் தமிழ் ரசிகர்களே! தாய்மொழிக்கு மதிப்பளிப்பதை உங்கள் கடவுளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!