தமிழன்.....
வீழ வந்தவன் இல்லை.
வாழ வந்தவன்!
தமிழன்.....
அழிய வந்தவன் இல்லை.
ஆள வந்தவன்!
தமிழை உயிரென கொண்டவன்.
தடைகள் பலவகை கண்டவன்.
மரண வாசல் வரை சென்றவன்.
மறவனாகி அதை வென்றவன்.
தமிழன்.....
துயரம் பார்த்தவன் - துயரின்
உயரம் பார்த்தவன்.
உறுதியானவன் இவன் என
உலகம் உணரவைத்தவன்.
மொழியை இழந்த இனங்களெல்லாம்
அழிவை அணைத்த உண்மை அறிவான்.
தாரணி எங்கும் பரவினாலும்
தாயெனக்கொண்ட தமிழை மறவான்.
மன்னன் என்றாகி
பெருவில் வென்றபோதும்.....
மண்ணே இல்லையென்றாகி
தெருவில் நின்றபோதும்.....
கண்கள் இனமும் மொழியும் என்ற
கருத்தில் கணமும் மாறாதவன்.
இமயத்தில் தான் கொண்ட
கொடியை ஏற்றியபோதும்.....
இலங்கையில் தான் கண்ட
கொடுமை எதிர்த்தபோதும்.....
இனத்தின் இருப்பைத்தான்
இதயத்தில் இருக்கவைத்தான்.
அவனி அறியவென
பாடங்கள் தந்தபோதும்.....
அகதி அவதியென
காலங்கள் வந்தபோதும்.....
அன்னைத்தமிழின்
தொன்மை காத்தவன்.
பார் எதிர்த்து நிற்கையிலும்.....
போர் தொடுத்து நின்றவன்.
சதி துலங்கி மிதிக்கையிலும்.....
கதி கலங்கி டாதவன்.
வென்றிட முடியா நிலையிலும்.....
ஒன்றிட நின்றவன்.
அன்று.....
உலகம் வியக்க குறள் கொடுத்தவன்.
இன்று.....
உரிமை காக்க குரல் கொடுப்பவன்.
அகிலம் போற்ற
அரசனாய் எழுந்தாலும்.....
அகதியாகி
அடிமையாய் உழன்றாலும்.....
தமிழன் என்று சொல்ல
தயங்காதவன்.
தமிழ் ஆளும் நாள்வரை
தளராதவன்.
தமிழன்.....
அழியப்பிறந்தவன் இல்லை
அசராதவன் என உலகம்
அறியப்பிறந்தவன்!
வீழ வந்தவன் இல்லை.
வாழ வந்தவன்!
தமிழன்.....
அழிய வந்தவன் இல்லை.
ஆள வந்தவன்!
தமிழை உயிரென கொண்டவன்.
தடைகள் பலவகை கண்டவன்.
மரண வாசல் வரை சென்றவன்.
மறவனாகி அதை வென்றவன்.
தமிழன்.....
துயரம் பார்த்தவன் - துயரின்
உயரம் பார்த்தவன்.
உறுதியானவன் இவன் என
உலகம் உணரவைத்தவன்.
மொழியை இழந்த இனங்களெல்லாம்
அழிவை அணைத்த உண்மை அறிவான்.
தாரணி எங்கும் பரவினாலும்
தாயெனக்கொண்ட தமிழை மறவான்.
மன்னன் என்றாகி
பெருவில் வென்றபோதும்.....
மண்ணே இல்லையென்றாகி
தெருவில் நின்றபோதும்.....
கண்கள் இனமும் மொழியும் என்ற
கருத்தில் கணமும் மாறாதவன்.
இமயத்தில் தான் கொண்ட
கொடியை ஏற்றியபோதும்.....
இலங்கையில் தான் கண்ட
கொடுமை எதிர்த்தபோதும்.....
இனத்தின் இருப்பைத்தான்
இதயத்தில் இருக்கவைத்தான்.
அவனி அறியவென
பாடங்கள் தந்தபோதும்.....
அகதி அவதியென
காலங்கள் வந்தபோதும்.....
அன்னைத்தமிழின்
தொன்மை காத்தவன்.
பார் எதிர்த்து நிற்கையிலும்.....
போர் தொடுத்து நின்றவன்.
சதி துலங்கி மிதிக்கையிலும்.....
கதி கலங்கி டாதவன்.
வென்றிட முடியா நிலையிலும்.....
ஒன்றிட நின்றவன்.
அன்று.....
உலகம் வியக்க குறள் கொடுத்தவன்.
இன்று.....
உரிமை காக்க குரல் கொடுப்பவன்.
அகிலம் போற்ற
அரசனாய் எழுந்தாலும்.....
அகதியாகி
அடிமையாய் உழன்றாலும்.....
தமிழன் என்று சொல்ல
தயங்காதவன்.
தமிழ் ஆளும் நாள்வரை
தளராதவன்.
தமிழன்.....
அழியப்பிறந்தவன் இல்லை
அசராதவன் என உலகம்
அறியப்பிறந்தவன்!