இப்படி தமிழன் வாழ்வு
இருக்க வேண்டுமென
எதிர்பார்ப்பு ஒன்று
இருந்தது அன்று.
இனம்.....
எப்படி இருந்தாலும்
என்ன என
நினைப்பவர் வரிசை
நீள்கிறது இன்று.
தமிழை தரிசாக்கும்,
தமிழினத்தின் வேரறுக்கும்,
பண்பாட்டை
படுகுழியில் தள்ளும்,
கலாச்சாரத்தை
காவு கொடுக்கும்
கணக்கற்ற விடயங்கள்
கண்களில் தெரிகின்றன.
இவற்றை செய்யும் எம்மவரும்
இன அழிப்பைத்தான் செய்கிறார்கள்.
இதற்காகவே காத்திருந்தார்கள்
என்பது போலவே செய்கிறார்கள்.
அவர்கள்.....
அறிந்துதான் செய்கிறார்கள்.
அறியாமல்தான் நாங்கள்
எப்போதும் சொல்கிறோம்.....
"இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்!"
ஒன்றாக குரல்கொடுக்க
ஒரு பொழுது வரும் பொழுது
ஒவ்வொரு திசைக்கொருவராய்
வெவ்வேறாகி நிற்கலாம்.
ஓரணியில் திரண்டு நிற்க
ஒரு வேளை வரும் வேளை
ஒற்றுமைக்கும் தமிழனுக்கும்
ஒளியாண்டு தூரமென
உலகுக்கு உணர்த்தலாம்.
செத்துக்கொண்டிருக்கும் இனத்தை மறந்து
சொத்துக்களுக்காய் மல்லுக்கட்டலாம்.
அன்னை மண்
அபகரிக்கப்படும் பொழுதும்
அண்ணன் தம்பி சண்டையில்
அதிரடியாய் இறங்கலாம்.
பாதி நிலமே
பறிபோய்விட்டது.
எனினும்.....
சாதிகளை
சல்லடை போட்டு பிரிக்கலாம்.
கருத்து ஒன்றி நின்றபோதே
பிரித்து மேய நினைத்தவர்க்கு
இரண்டுபட்டு நாம் நின்று
இனவழிப்பை
இலகுவாக்கி உதவலாம்.
எதைத்தான் அழித்தாலும்
இதைத்தான் நாம் சொல்வோம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
இதுவரை இல்லாதபடி
இளவயது கர்ப்பங்கள்
இமயம்போல் உயர்கிறதாம்!
இயலாமை காரணம்தான் சிலருக்கு
இல்லாமை காரணம்தான் சிலருக்கு.
இருப்பினும் சிறிய
இன்பம்தானே காரணம் பலருக்கு?
இவையெல்லாம் தெரிந் திருந்தும்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இனம் திருந்தும்?
இருந்தாலும் இதுவும் நோய்தான் - எந்த
மருந்தாலும் மாறாதது.
பண்பாடு இழந்த இனத்தின் வாழ்வு
மண்மேடு ஆகிவிடும் எனும் சிறு
கோட்பாடு புரிந்தால்தான்
இக்கேடு இல்லையென்றாகும்.
புரியாவிட்டால்.....
புரியாவிட்டாலும் போகுது கழுத!
புலம்பல் போல் இருந்தாலும்
புளுகு போல் இருந்தாலும்
புதையும் வரை சொல்லிக்கொண்டிருப்போம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
மெல்லத்தமிழ் இனி சாகுமென
காத்திருந்து களைத்துப்போனவர்கள்
கொல்லக்கிளம்பலாம்.
அழகுதமிழ் அருவருத்து
ஆங்கிலத்தை அருமருந்தாக்கலாம்.
கல்விதரும் பள்ளிகள்
காசுகறக்கும் பண்ணைகளாகலாம்.
அந்நியமொழி மோகம் முற்றி
அள்ளிப் பணத்தை அளித்துவிட்டு
அன்புமகன் அதை பேசுவதை
அருமை பெருமையாக அளக்கலாம்.
தவறியும் பிள்ளை
தமிழ் பேசுவது
தரங் கெட்டதாக தெரியலாம்.
அன்னை மொழியை கொன்று
ஆங்கிலத்தை அரியணை ஏற்றலாம்.
மொழியிழந்த இனம் அருகி
அழிந்தொழிந்து விடுமென்ற
தெளிவுடைந்து போய்விடலாம்.
இன்னொருவன் தேவையில்லை
இனி நாமே எம்மை புதைத்துவிடலாம்.
ஆங்கிலத்துக்கும்
அந்நியனுக்கும்
அல்ககோலுக்கும்
அடிமையானவன்தான் தமிழனென
அனைவருக்கும் அறியவரலாம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
விடியலும் கிடைக்கவில்லை.
விம்மியழுத கணங்களும்
விலகிப்போகவில்லை.
விடையேதும் தெரியாத மண்ணில்
விபச்சாரம் விஸ்தரிக்கப்படலாம்.
விருட்சத்தை வீழ்த்தி
கோடிகளை கோடரிகள் காண
காம்புகள் கைகொடுக்கலாம்.
வலைகள்மேல் காதல்
வசப்பட்ட மீன்கள்
வீசியவனை
பேசியென்ன பலன்?
விழுகிறோம் என்பதால்தானே
வீசுகின்றான் அவன்?
காணாததை கண்டவர்களாய்
காலம் வரும் இதற்கென
காத்திருந்த காமுகர்களாய்
எம்முள் பலர் இருக்கும்போது
எதிரி என்று இன்னொருவனை
எப்படி கைகாட்டமுடியும்?
எப்படியும் எவன் இருக்கட்டும்
வார்த்தைகளை
இப்படியே தொடர்வோம் நாம்
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
பலநாள் கனவுகள்
பார்
பார்த்திருக்க சிதைந்தாலும்
படமொன்று வரும்போது
பகலிரவாய் உழைக்கலாம்.
வாடகைக்கேனும் வாகனமேடுத்து
வகைவகையாய் போஸ்டர் ஒட்டி
வளைச்சுவளைச்சு ஸ்பீக்கர் கட்டி
வாய்வலிக்க வரலாறு சொல்லி
தல, தளபதியின் பெருமைகளை
தமிழனுக்கு உணர்த்தலாம்.
முள்வேலி முகாம்களில்
மூன்றுவேளை சோறின்றி
பசித்திருந்தவர்களையும் மறந்து
பதாதைகளுக்கு பாலூற்றி
பரவசமடையலாம்.
அவசியமானதொன்றை செய்துவிட்டதாய்
அளவில்லா ஆனந்தமடையலாம்.
அனைத்து பெயர்ப்பலகைகளும்
அழகிகளால் நிறையலாம்.
இடியப்பக்கடை முகப்பிலும்
இடுப்பு தெரிய
இலியானா சிரிக்கலாம்.
அழகு அதிகம்
அசினுக்கா அமலாபாலுக்கா என்ற
அரும்புமீசைகளின் அரட்டைவாதம்
அடிதடியிலும் முடியலாம்.
இப்படி இன்னும்
எத்தனையோ நடக்கலாம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
பள்ளி செல்லும் பருவத்திலேயே
பலத்திலும் நாட்டம் வரலாம்.
கணனியில் கைகள்
கல்வியை விட அதிகம்
கலவியை தேடலாம்.
வயதுக்கோளாறு என்ற
வார்த்தையை வரமாக்கி
வயதையே கோளாறாக்கலாம்.
பாடம் சொல்ல நினைப்பவர்
பைத்தியக்காரராக தெரியலாம்.
பாமசிக்காரர் பரிச்சயமானவராகலாம்.
பார்த்து பல்லிளிக்கலாம்.
பத்து இருபது கூடக்கொடுத்தாவது
பக்கற்றோடு வாங்கிப்போகலாம்.
பண்படாத பாலியலை பல்லக்கிலேற்ற
பகுத்தறிவு ஆயுதத்தை பயன்படுத்தலாம்.
கலாச்சார வயல்வெளியில்
களைகளாக பெருகலாம்.
இவையெல்லாம் நடப்பது தெரிந்தும்
இப்படித்தான் நாம் சொல்வோம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
அழிக்க நினைப்பவர்க்கு
அடிவருடும் ஒருகூட்டம்.
அழிவுப்பாதையில்
அறிந்தே நடக்கும் ஒருகூட்டம்.
உணர்ச்சிகள் இருந்தும்
ஊமைகளாய் ஒருகூட்டம்.
உல்லாச விடயங்களே
உணர்ச்சிகளாய் ஒருகூட்டம்.
இனத்தின் இருப்பை
இதயத்தில் கொண்டவர்கள்
இருக்கிறார்கள் இன்னும்.
இல்லையென்றில்லை.
அவர்களும் அருகி
அழிந்து போனாலும்
இறுதித்தமிழனும்
இதைத்தான் சொல்வான்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
இருக்க வேண்டுமென
எதிர்பார்ப்பு ஒன்று
இருந்தது அன்று.
இனம்.....
எப்படி இருந்தாலும்
என்ன என
நினைப்பவர் வரிசை
நீள்கிறது இன்று.
தமிழை தரிசாக்கும்,
தமிழினத்தின் வேரறுக்கும்,
பண்பாட்டை
படுகுழியில் தள்ளும்,
கலாச்சாரத்தை
காவு கொடுக்கும்
கணக்கற்ற விடயங்கள்
கண்களில் தெரிகின்றன.
இவற்றை செய்யும் எம்மவரும்
இன அழிப்பைத்தான் செய்கிறார்கள்.
இதற்காகவே காத்திருந்தார்கள்
என்பது போலவே செய்கிறார்கள்.
அவர்கள்.....
அறிந்துதான் செய்கிறார்கள்.
அறியாமல்தான் நாங்கள்
எப்போதும் சொல்கிறோம்.....
"இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்!"
ஒன்றாக குரல்கொடுக்க
ஒரு பொழுது வரும் பொழுது
ஒவ்வொரு திசைக்கொருவராய்
வெவ்வேறாகி நிற்கலாம்.
ஓரணியில் திரண்டு நிற்க
ஒரு வேளை வரும் வேளை
ஒற்றுமைக்கும் தமிழனுக்கும்
ஒளியாண்டு தூரமென
உலகுக்கு உணர்த்தலாம்.
செத்துக்கொண்டிருக்கும் இனத்தை மறந்து
சொத்துக்களுக்காய் மல்லுக்கட்டலாம்.
அன்னை மண்
அபகரிக்கப்படும் பொழுதும்
அண்ணன் தம்பி சண்டையில்
அதிரடியாய் இறங்கலாம்.
பாதி நிலமே
பறிபோய்விட்டது.
எனினும்.....
சாதிகளை
சல்லடை போட்டு பிரிக்கலாம்.
கருத்து ஒன்றி நின்றபோதே
பிரித்து மேய நினைத்தவர்க்கு
இரண்டுபட்டு நாம் நின்று
இனவழிப்பை
இலகுவாக்கி உதவலாம்.
எதைத்தான் அழித்தாலும்
இதைத்தான் நாம் சொல்வோம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
இதுவரை இல்லாதபடி
இளவயது கர்ப்பங்கள்
இமயம்போல் உயர்கிறதாம்!
இயலாமை காரணம்தான் சிலருக்கு
இல்லாமை காரணம்தான் சிலருக்கு.
இருப்பினும் சிறிய
இன்பம்தானே காரணம் பலருக்கு?
இவையெல்லாம் தெரிந் திருந்தும்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இனம் திருந்தும்?
இருந்தாலும் இதுவும் நோய்தான் - எந்த
மருந்தாலும் மாறாதது.
பண்பாடு இழந்த இனத்தின் வாழ்வு
மண்மேடு ஆகிவிடும் எனும் சிறு
கோட்பாடு புரிந்தால்தான்
இக்கேடு இல்லையென்றாகும்.
புரியாவிட்டால்.....
புரியாவிட்டாலும் போகுது கழுத!
புலம்பல் போல் இருந்தாலும்
புளுகு போல் இருந்தாலும்
புதையும் வரை சொல்லிக்கொண்டிருப்போம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
மெல்லத்தமிழ் இனி சாகுமென
காத்திருந்து களைத்துப்போனவர்கள்
கொல்லக்கிளம்பலாம்.
அழகுதமிழ் அருவருத்து
ஆங்கிலத்தை அருமருந்தாக்கலாம்.
கல்விதரும் பள்ளிகள்
காசுகறக்கும் பண்ணைகளாகலாம்.
அந்நியமொழி மோகம் முற்றி
அள்ளிப் பணத்தை அளித்துவிட்டு
அன்புமகன் அதை பேசுவதை
அருமை பெருமையாக அளக்கலாம்.
தவறியும் பிள்ளை
தமிழ் பேசுவது
தரங் கெட்டதாக தெரியலாம்.
அன்னை மொழியை கொன்று
ஆங்கிலத்தை அரியணை ஏற்றலாம்.
மொழியிழந்த இனம் அருகி
அழிந்தொழிந்து விடுமென்ற
தெளிவுடைந்து போய்விடலாம்.
இன்னொருவன் தேவையில்லை
இனி நாமே எம்மை புதைத்துவிடலாம்.
ஆங்கிலத்துக்கும்
அந்நியனுக்கும்
அல்ககோலுக்கும்
அடிமையானவன்தான் தமிழனென
அனைவருக்கும் அறியவரலாம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
விடியலும் கிடைக்கவில்லை.
விம்மியழுத கணங்களும்
விலகிப்போகவில்லை.
விடையேதும் தெரியாத மண்ணில்
விபச்சாரம் விஸ்தரிக்கப்படலாம்.
விருட்சத்தை வீழ்த்தி
கோடிகளை கோடரிகள் காண
காம்புகள் கைகொடுக்கலாம்.
வலைகள்மேல் காதல்
வசப்பட்ட மீன்கள்
வீசியவனை
பேசியென்ன பலன்?
விழுகிறோம் என்பதால்தானே
வீசுகின்றான் அவன்?
காணாததை கண்டவர்களாய்
காலம் வரும் இதற்கென
காத்திருந்த காமுகர்களாய்
எம்முள் பலர் இருக்கும்போது
எதிரி என்று இன்னொருவனை
எப்படி கைகாட்டமுடியும்?
எப்படியும் எவன் இருக்கட்டும்
வார்த்தைகளை
இப்படியே தொடர்வோம் நாம்
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
பலநாள் கனவுகள்
பார்
பார்த்திருக்க சிதைந்தாலும்
படமொன்று வரும்போது
பகலிரவாய் உழைக்கலாம்.
வாடகைக்கேனும் வாகனமேடுத்து
வகைவகையாய் போஸ்டர் ஒட்டி
வளைச்சுவளைச்சு ஸ்பீக்கர் கட்டி
வாய்வலிக்க வரலாறு சொல்லி
தல, தளபதியின் பெருமைகளை
தமிழனுக்கு உணர்த்தலாம்.
முள்வேலி முகாம்களில்
மூன்றுவேளை சோறின்றி
பசித்திருந்தவர்களையும் மறந்து
பதாதைகளுக்கு பாலூற்றி
பரவசமடையலாம்.
அவசியமானதொன்றை செய்துவிட்டதாய்
அளவில்லா ஆனந்தமடையலாம்.
அனைத்து பெயர்ப்பலகைகளும்
அழகிகளால் நிறையலாம்.
இடியப்பக்கடை முகப்பிலும்
இடுப்பு தெரிய
இலியானா சிரிக்கலாம்.
அழகு அதிகம்
அசினுக்கா அமலாபாலுக்கா என்ற
அரும்புமீசைகளின் அரட்டைவாதம்
அடிதடியிலும் முடியலாம்.
இப்படி இன்னும்
எத்தனையோ நடக்கலாம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
பள்ளி செல்லும் பருவத்திலேயே
பலத்திலும் நாட்டம் வரலாம்.
கணனியில் கைகள்
கல்வியை விட அதிகம்
கலவியை தேடலாம்.
வயதுக்கோளாறு என்ற
வார்த்தையை வரமாக்கி
வயதையே கோளாறாக்கலாம்.
பாடம் சொல்ல நினைப்பவர்
பைத்தியக்காரராக தெரியலாம்.
பாமசிக்காரர் பரிச்சயமானவராகலாம்.
பார்த்து பல்லிளிக்கலாம்.
பத்து இருபது கூடக்கொடுத்தாவது
பக்கற்றோடு வாங்கிப்போகலாம்.
பண்படாத பாலியலை பல்லக்கிலேற்ற
பகுத்தறிவு ஆயுதத்தை பயன்படுத்தலாம்.
கலாச்சார வயல்வெளியில்
களைகளாக பெருகலாம்.
இவையெல்லாம் நடப்பது தெரிந்தும்
இப்படித்தான் நாம் சொல்வோம்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "
அழிக்க நினைப்பவர்க்கு
அடிவருடும் ஒருகூட்டம்.
அழிவுப்பாதையில்
அறிந்தே நடக்கும் ஒருகூட்டம்.
உணர்ச்சிகள் இருந்தும்
ஊமைகளாய் ஒருகூட்டம்.
உல்லாச விடயங்களே
உணர்ச்சிகளாய் ஒருகூட்டம்.
இனத்தின் இருப்பை
இதயத்தில் கொண்டவர்கள்
இருக்கிறார்கள் இன்னும்.
இல்லையென்றில்லை.
அவர்களும் அருகி
அழிந்து போனாலும்
இறுதித்தமிழனும்
இதைத்தான் சொல்வான்.
" இருந்தாலும் எம்மினம் நிலைக்கும்.
ஏனென்றால் இது எங்கள் மண்! "