
ரஜினியின் சிகரெட் பிராண்ட் மார்ல்பரோ. இப்போது புகைப்பதை கிட்டத்தட்ட விட்டுவிட்டார். எப்போதாவது கொஞ்சம் டென்ஷனாக இருந்தால் மட்டும் ஒரேயொரு சிகரெட்.
விலையுயர்ந்த கார்கள் வீட்டில் வரிசைகட்டி நிற்கும். ஆனால் ரஜினி உபயோகப்படுத்துவது அம்பாசடர்தான். மீறிப்போனால் குவாலிஸ்.
'அப்படியா... அப்படியா...?', 'ஃபைன்', வெரிகுட்... வெரிகுட்...!' - இவைதான் ரஜினி பேசும்போது அடிக்கடி உதிர்க்கின்ற சொற்கள்.
ஏகப்பட்ட புத்தகங்களை வாசிப்பார். அவற்றில் உள்ள பொன்மொழிகள், குட்டிக்கதைகள், நீதிக்கதைகள் எல்லாவற்றையும் குரித்துவைக்கச்சொல்வார். எங்காவது மேடையில் பரபரப்பாக வந்து விழுந்து கைதட்டல்களை அள்ளும் அவை!

ரஜினியின் போயஸ் தோட்ட பிருந்தாவன் வீடு, ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள அவரது பிரத்தியோக அறை, கேளம்பாக்கம் பண்ணை வீடு என எல்லா இடங்களிலும் 'ஓம்' எனும் பிரணவ மந்திரம் மெல்லிதாக ஒலித்தபடி இருக்கும். 'கடுமையான வார்த்தைகளுக்கு இது அணை போடுகிறது' என்பார்.
ஆரம்பகாலங்களில் சாப்பாடுக்கே கஷ்டப்பட்டபோது அவருடன் கூட இருந்தவர்கள்தான் இன்றும் ரஜினியின் நெருங்கிய நண்பர்கள்.
நண்பர்களிடம் பேசினால் அவர்களை எதிர்மறையாக விமர்சிக்கவேமாட்டார். நண்பர்களின் வீட்டுக்கு ஆச்சரிய வருகை தந்து, தயிர்சாதம் இருந்தாலும் சாப்பிட்டு, கொஞ்சம் கண்ணயர்வது வழக்கம்.
உருத்திராட்சைகளை சேமிப்பதில் ஆர்வம் உண்டு. வகைவகையான உருத்திராட்சைகள் அவரிடம் உண்டு. நெருக்கமானவர்களுக்கு பரிசாகவும் தருவார்.
ரஜினியை யார் பார்க்க வந்தாலும் அவர்களைப்பற்றிய அன்றைய செய்தி வரைக்கும் அறிந்து வைத்திருப்பார். அவற்றை சொல்லி அவர்களை திக்குமுக்காட வைப்பார். வயதில் சிறியவர்கள் வந்தால் கூட எழுந்து நின்று பேசி, அமர வைத்து, வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புவார்.
பெங்களூரில் ரஜினிக்கு ஒரு வீடு இருக்கிறது. நினைத்தால் அங்கே கிளம்பிச்செல்வார். அந்த வீடு முழுவதும் இசையும் புத்தகங்களும் தனிமையும்தான். இப்போதும் தனிமையில் விரும்பிக்கேட்கும் பாடல்கள் 'நான் ஒரு முட்டாளுங்க...' 'ஒண்ணுமே புரியல...'
சக நடிகர்களை எவரும் அவமானப்படுத்த அனுமதிக்கவே மாட்டார். சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கத்தொடங்கிய சமயம், 'வில்லனா நடிச்சவநேல்லாம் இப்ப ஹீரோவாம். காலம் கெட்டுப்போச்சு.' என தனது படப்பிடிப்புத்தலத்தில் ஒருவர் கூறியதை கேட்டு, 'சத்யராஜ் ஹீரோவா நடிச்சா என்னய்யா தப்பு? நான் கூடத்தான் வில்லனா நடிச்சு ஹீரோ ஆனவன்.' என சண்டைக்கே போய்விட்டாராம்!
No comments:
Post a Comment